மணிமங்கலத்தின் வரலாறு
தமிழக வரலாற்றில் பல்லவ மன்னர்களது கோட்டையாக திகழ்ந்த கஞ்சிவரம் எனும் மாநகரானது, தொண்டை மண்டலமாக இருந்து வந்துள்ளதனை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. முற்காலத்தில் கஞ்சிவரம் என்றிருந்த பெயரானதே இன்று மருவி காஞ்சிபுரம் என உள்ளது என்பதனை நம்மால் அறிந்திட இயல்கின்றது. பல்லவ மன்னர்களின் ஆட்சி காலத்தில் சம்ஸ்கிருத மொழியானது ஆதிக்க வல்லமை கொண்டிருந்தது என்பதற்குரிய வரலாற்று சான்றாதாரமாக, பல்லவ சாம்ராஜ்யத்தின் தொண்டை மண்டலத்திலுள்ள மணிமங்கலத்தின் பெயரானது சமஸ்கிருத மொழியிலான பெயராகிய "இரத்தினகிரஹா" எனவும் "இரத்தினகிராமா" எனவும் இருந்துள்ளது என்பதற்குரிய வரலாற்று சான்றாதாரமாக இன்றைய நிலையில் அருள்மிகு "இராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் என மருவிய பெயருடன் உள்ள தொண்டை மண்டலத்தின் துவாரகை ஸ்தலமாகிய இந்த வைணவ ஆலயத்தின் கருங்கற்சுவர்களில் பதிந்துள்ள கி.பி 9ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழ மன்னர்களது ஆட்சி காலத்தின் கல்வெட்டு எழுத்துக்கள் இன்றளவும் தெளிவாக விளக்குகின்றது. மேலும் "இரத்தினகிரஹாரா" எனும் சொல்லின் முதலில் உள்ள "இரத்தின" எனும் சொல்லிற்கு தமிழ் மொழியில் "மணி" என்று பொருள்படும். (“Ratna” is synonymous with “MANI” i.e. the first portion of the name MANI MANGALAM) எனபதனாலேயே இக்கிரமத்திற்கு "மணிமங்கலம்" எனும் பெயரானது. தமிழ் மொழியில் "பல்லவ மன்னர்களது ஆட்சி காலந்தொட்டே நிலைபெற்றுள்ளது" என்பது நம்மால் தெளிவாக அறிந்திட இயலும்.
தொண்டை மண்டலத்திற்குட்பட்ட இத்துவாரகை ஸ்தலத்தில் உள்ள சோழ மன்னர்களது ஆட்சி கால கல்வெட்டு தகவல்களானது, சம்ஸ்கிருத மொழியின் மீது கொண்டுள்ள மொழி பற்றினைக் காட்டிலும், தமிழ் மொழி மீது அதீத பற்று கொண்டிருந்த சோழ மன்னர்களது ஆட்சி காலத்தில் "இராஜகேசரிவர்மன்" எனும் சோழ மன்னரது ஆட்சிக்காலத்தில் "இரத்தினகிரஹாரா" எனவும் "இரத்தினகிராமா" எனவும் சம்ஸ்கிருத மொழியினால் அழைக்கப்பட்டு வந்த இக்கிராமத்தின் பெயரானது அறவே அகற்றப்பட்டு தமிழ் மொழியிலான பெயராகிய "லோகமஹாதேவி சதுர்வேதி மங்கலம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை சோழ மன்னர்களது ஆட்சி கால கல்வெட்டு எழுத்துகளின் வாயிலாக நமக்கு உணர்த்துகிறது. இந்துக்களின் புனித வேதங்களாக கருதப்படும் நான்கு வேதங்களாகிய ரிக், யஜீர், சாம மற்றும் அதர்வணம் எனும் நான்கு வேதங்களையும் நன்கு கற்றுணர்ந்திருந்த "அந்தணர்களுக்கென" பிரத்யேக குடியிருப்பு பகுதியாக குறிப்பாக நில ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால், தமிழ் மொழியில் வேதம் எனும் சொல்லானது வேதங்களின் செய்யுள்களினை குறிக்கும் என்பதனாலும் "வேதி" அல்லது "வேதியர்கள்" எனும் சொல்லானது "வேதங்களினை கற்றுணர்ந்து அவற்றினை உரிய நேரத்தில் ஓதுபவர்கள்" எனும் பொருள்படும் என்பதாலும் இக்கிராமத்தின் பெயரினை "சதுர்வேத மங்கலம்" என குறிப்பிடாமல் "சதுர்வேதி மங்கலம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கிராமத்திற்கு சோழ மன்னர்களது காலத்தில் சூடப்பட்டுள்ள "லோகமாதேவி சதுர்வேதி மங்கலம்" எனும் பெயரில் இடம் பெற்றுள்ள "லோகமஹாதேவி" எனும் சொற்றொடர் இரண்டு வித பொருள்படுமாறு அமைந்துள்ளதையும் நமக்கு உணர்திடுகிறது.
அதாவது இராஜராஜ சோழ மன்னரின் மனைவியின் பெயரானது "லோகமஹாதேவி" என்பதனால் தனது மனைவியின் பெயரினாலேயே இக்கிராமத்தினை நான்கு வேதங்களினை கற்றுணர்ந்த "அந்தணர்களுக்கென செட்டில்மென்ட் மூலம் அர்பணிக்கப்பட்டுள்ளது" எனும் ஒரு பொருட் செறிவினையும், மற்றொரு பொருட்செறிவானது, இக்கலியுகத்தில் காக்கும் தெய்வமாக இந்துக்களால் கருதப்பட்டு வரும் "ஸ்ரீமஹாவிஷ்ணுவின்" மனைவியாகிய ஸ்ரீமஹாலட்சுமியானவர் இத்துவாரகை ஸ்தலத்தினில் "செங்கமலவல்லித் தாயார்" எனும் திருநாமத்துடனும் வீற்றிருப்பதினாலும், சைவ சித்தாந்த கோட்பாடுகளின் மீது அதீத சமய சமயபற்று கொண்டுள்ள இந்துக்களாகிய பக்தர்களை காப்பதற்கென இம்மணிமங்கலத்தில் உற்றமைந்துள்ள அருள்மிகு தர்மேஷ்வரர் திருக்கோயிலில் "வேதாம்பிகை" எனும் திருநாமத்துடன் சைவ சித்தாந்தத்தின் மூலநாயகனாகிய சிவபெருமானின் மனைவியாகிய "பார்வதி தேவி" வீற்றிருப்பதினாலும் இவ்விரு தேவியர்களும் "லோகமஹாதேவியாக" சைவ மற்றும் வைணவ அடியார்களால் கருதப்பட்டு வருவதனாலும், இக்கருத்துருத் தகவலினை மையப்படுத்தியே "இம்மணிமங்கலம் கிராமத்தின் பெயரினை சோழ மன்னர்களது ஆட்சி காலத்தில் லோகமாதேவி சதுர்வேதி மங்கலம்" என்று இருந்த இம்மணிமங்கலம் கிராமத்தின் பெயரினை "இராஜசூலாமணி சதுர்வேதி மங்கலம்" என பெயர்மாற்றம் செய்துள்ளனர் என்பதையும் இத்துவாரகை ஸ்தலத்தினில் உள்ள சோழ மன்னர்களது ஆட்சி கால கல்வெட்டுகள் வாயிலாக அறியமுடிகிறது.
பின்னர் வந்த சோழ மன்னர்களது ஆட்சி காலத்தில் பாண்டிய மன்னர்களுடன் இரண்டு முறை போரிட்டு வெற்றி பெற்றிட இம்மணிமங்கலம் கிராமத்தில் வீற்றுள்ள ஸ்ரீமத் துவாரபதி எனும் திருநாமத்துடனும் இத்துவாரகை ஸ்தலத்தினில் வீற்றுள்ள பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அருளாசி சோழ மன்னர்களுக்கு கிடைக்கப்பெற்றதே என சோழ மன்னர்கள் கருதியதாலும், அவ்வெற்றிக் களிப்பினைக் கொண்டாடும் விதமாக இம்மணிமங்கலம் கிராமத்திற்கு தங்களது சோழ வம்சாவெளியின் முன்னோர்களால் சூடபப்ட்டிருந்த "இராஜசூலாமணி சதுர்வேதி மங்கலம்" எனும் பெயரினை நிரந்தரமாக அகற்றிவிட்டு "பாண்டியனை-இரு-மடி-வெண்-கொண்ட-சோழ சதுர்வேதி மங்கலம்" என பெயரிட்டு மகிழ்ந்துள்ளனர் என்பதை இத்துவாரகை ஸ்தலத்தினில் உள்ள சோழ மன்னர்களது ஆட்சி கால கல்வெட்டுகள் வாயிலாக வரலாற்று சான்றாதாரத்துடன் அறியமுடிகிறது.
மேலும் மூன்றாம் இராஜராஜ சோழ மன்னரது 18ம் வருடத்தில் மணிமங்கலம் கிராமத்தின் பெயரான அகற்றிவிட்டு "பாண்டியனை-இரு-மடி-வெண்-கொண்ட-சோழ சதுர்வேதி மங்கலம்" எனும் பெயரானது நிரந்தரமாக அகற்றப்பட்டு மணிமங்கலம் கிராமத்தின் பெயரானது "கிராமசிகாமணி சதுர்வேதி மங்கலம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை அக்காலகட்டத்தில் இம்மணிமங்கலம் கிராமமானது "ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துடன் இணைக்கப்பட்டது" எனும் தகவலையும் நம்மால் அறிய முடிகிறது.
மேலும் முதலாம் வீரராஜேந்திர சோழ மன்னரது ஆட்சி காலத்தின் வரை "செங்காட்டு கோட்டத்தினை" மாவட்ட தலைநகராகவும், அதன் உட்பிரிவினையாக இருந்த "மகாணூர்-நாடு" ஒன்றியத்திற்கு உட்பட்டதாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது" என்பதையும் இச்சோழ மன்னரது ஆட்சி காலத்தில் "புலியூர் கோட்ட மாவட்டத்திலுள்ள "குன்றத்தூர்-நாடு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியானது "குலோத்துங்க-சோழ-வளநாடு" எனவும் பெயரிடப்பட்டுள்ளது.எனும் தகவலினையும் "குலோத்துங்க சோழ வளநாட்டின் அங்கமாக இருந்த இம்மனிமங்கலம் கிராமத்திலுள்ள "துவாரகை ஸ்தலத்தில் உள்ள சோழ மன்னர்களது ஆட்சிக்கால கல்வெட்டு எழுத்துக்களின் வரலாற்று சான்றாதாரங்களின் வாயிலாக நம்மால் கி.பி 21ம் நூற்றாண்டில் இம்மணிமங்கலம் கிராமத்தின் தொன்மை மற்றும் புராதன சிறப்பியல்புத் தன்மைகள் குறித்து தெளிவாக அறிந்திட இயல்கிறது.
இன்றைய காஞ்சிபுரம் மாவட்ட ம்-ஸ்ரீபெரும்புதூர் வட்டம்-குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் கிராமமானது இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் (Village No.320 on the Madras Survey Map of the Conjeevaram Taluka) எனும் பதிவுருக்களுடன் மேவி இருந்துள்ளது என்பதையும் நம்மால் அறிய முடிகிறது.
இன்றைய குன்றத்தூர் எனும் கிராமமானது முற்காலத்தில் ((Village No. 248 on the Madras Survey Map of the Saidapet Taluka) எனும் பதிவுருக்களுடன் மேவி இருந்துள்ளது என்பதையும் நம்மால் அறிய முடிகிறது.
"செங்காடு" எனும் கிராமமானது காஞ்சிவரம் தாலுக்காவில் உள்ளடக்கிய கிராமம் என்பதனையும், (Village No.250 on the Madras Survey Map of Conjeevaram Taluka) எனும் பதிவுருக்களுடன் மேவி இருந்துள்ளது என்பதையும் நம்மால் அறிய முடிகிறது.