ஆன்மீகம்
பக்தி என்பது எந்நேரமும் நெற்றியில் விபூதி பூசிக்கொண்டும், அனுதினமும் இறைவனின் நாமத்தை உச்சரித்தபடியும், விளம்பரத்திற்காக பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடைகள் கொடுப்பதுவும், அடுத்தவர்களுக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், மனதில் எந்த ஒரு தீய எண்ணங்களும் இல்லாமல், யாருக்கும் கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வதும் ஒருவகையான ஆன்மீகம்.
அடுத்ததாக, இறைவனிடம் பலமணி நேரம் பூஜைகள் செயும்போது வேறு நினைவுகளோடு இருப்பது எந்த ஒரு பலனும் கிடையாது. ஒரு நிமிடம் பூஜைகள் மேற்கொண்டாலும் ஆத்மார்த்தமாக இறைவனிடத்தில் தன்னை நிலைநிறுத்தி, இவ்வுலகில் எல்லாமும் நீயே, எல்லா செயல்களும் நீயே என முழுவதும் தன்னை அர்பணித்துக்கொண்டு சரணாகதி அடைவதும் ஒருவகையான ஆன்மீகம்.
மனிதர்கள் தான் அனுதினமும் நான்கு முறை குளிக்கிறேன், ஆறு முறை கடவுளை தொழுகிறேன் அனால் கடவுள் என்றும் என்னை கண்டுகொள்வதில்லை என சலித்துக்கொள்வதுண்டு. ஏனென்றால் தனக்கு ஏற்படும் நன்மைகளும், தீமைகளும் தான் வாழ்க்கையில் செய்யும் வினைகள் பொறுத்தே. மற்றவருக்கு தீங்கு செய்யாதிருத்தல், புறங்கூறாமல் இருத்தல், மற்ற உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல், அன்போடு பேசுதல் மேலும் தான் மற்றவர்களுக்கு விளம்பரமின்றி வலது கையில் செய்யும் உதவி எதிர்காலத்தில் உங்களுக்கு பிரம்மாண்ட வெற்றிகளாய் இடது கையில் வந்து சேரும். இது ஒரு வகையான ஆன்மீகம்.
இறைவனுக்கு பிரம்மாண்ட பூஜைகளும், பிரம்மாண்டமான படையல்களும் செய்வதன் மூலம் கடவுளை அடைந்து விடலாம் என்பது கிடையாது. கடவுள் அதை விரும்புவதும் கிடையாது. என்றென்றும் ஒருவன் கடவுளிடம் உண்மையாயிருத்தலையே விரும்புகின்றார். தன்னை முழுவதும் கடவுளிடம் அர்ப்பணித்து இவுலகில் நிகழும் அனைத்தும் இறைவனின் செயல்களே என தியானித்து வாழ்ந்து வருவதே உச்ச கட்ட ஆன்மீகம்.
உலகில் எல்லாமும் கடவுளல்ல, அனால் எல்லாம் கடவுளே..!
இவ்வுலகில் அனைத்தும் கடவுள் இல்லை, அனால் எல்லாம் கடவுளே என்பது பழமொழியாகும். இந்த உலகத்தில் மறவர்களுக்கு எந்தவித பலனும் எதிர்பார்க்காமல் செய்யும் உதவி உங்களுக்கு கடவுளை சென்றடையும் சரியான பாதையை தேந்தெடுத்துளீர்கள் என்று பொருள். இதுவே சரியான வழியாகும்.