நாம் ஆரோக்கியமாக வாழ சில வழிமுறைகள்
நமது உடலை ஆரோக்கியத்துடனும், வளத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது இயல்பான மன நிலை. அப்படி நினைப்பவா்கள் இந்த பத்து வழிமுறைகளை கடைபிடிப்பது நல்ல பயனளிக்கும்.
அனுதினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்வதல்ல, தினசரி அலுவல்களுக்கிடையே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்யலாம். படிகளில் ஏறி இறங்குவது, அடிக்கடி நடப்பது, கண்களுக்கு பயிற்சி கொடுப்பது, கைகால்களை நீட்டி மடக்குவது, மூச்சுப் பயிற்சி என எவ்வளவோ செய்யலாம்.
தினந்தோரும் மூன்று வேளை மூக்கு முட்ட அசைவப் பொருட்களை உடலுக்குள் திணிப்பதை கொஞ்சம் ஒத்தி வையுங்கள். எல்லாம் அளவாய் இருப்பதே ஆரோக்கியமளிக்கும். தினமும் ஐந்து முறை பழவகைகள் மற்றும் காய்கறிளை உண்ணுங்கள். காய்காிகள் பெரும்பாலும் வேக வைக்காமல் சாப்பிடக்கூடிய காய்காிகளை அப்படியே சாப்பிடுங்கள். மற்ற காய்கறிகள் பாதி வேக வைத்து உண்ணலாம்.