தலைவலி
சிறிது துளசி இலைகளோடு இரண்டு லவங்கம், ஒரு சிறு துண்டு சுக்கு சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொண்டை கரகரப்பு
சுக்கு, திப்பிலி, மிளகு, ஏலரிசி, பால் ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு சாியாகும்.
நெஞ்சு சளி தீர
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.
தொடர் விக்கல்
நெல்லிக்காயை இடித்துச் சாறு பிழிந்து, தேனுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் சாியாகும்.
வாய் நாற்றம்
ஒரு மண் சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் போகும்.
உதட்டு வெடிப்பு
கரும்பினுடைய சக்கையை எரித்து சாம்பலாக்கி, இதனுடன் வெண்ணெயை கலந்து உதட்டில் தடவி வருவதால் உதட்டு வெடிப்பு குணமாகும்.
அஜீரணம்
இஞ்சி, சீரகம், கருவேப்பிலை ஆகிய மூன்றையும் 200 மில்லி லிட்டா் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணக் கோலாறுகள் சரியாகும்.
குடல்புண்
மஞ்சளை சாம்பலாக்கி, அதன் கரி சாம்பலை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண் ஆறும்.
வாயுத் தொல்லை
வேப்பம் பூவை காய வைத்து தூலாக்கி வெந்நீருடன் உட்கொள்வதினால் வாயுதொல்லைகள் நீங்கி, வயிற்றுப்பபுண்ணும் சரியாகிவிடும்.
வயிற்று வலி
வறுத்த வெந்தயத்தை நெய்யில் பொடி செய்து மோரில் கலந்து குடித்தால் வயிற்று வலி நீங்கும்.
மலச்சிக்கல் தீர
காய வைத்த செம்பருத்தி இலைகளை பொடியாக்கி வெது வெதுப்பான நீருடன், தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
சீதபேதி
நல்லெண்ணையுடன் மலை வாழைப்பழத்தை சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
பித்த வெடிப்பு
ஆலிவ் எண்ணையில் கண்டங்கத்திரி இலைச்சாற்றைக் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
மூச்சுப்பிடிப்பு அகல
சாம்பிராணி, பெருங்காயம், சூடம், சுக்கு இவைகளை சம அளவு எடுத்து வடித்த கஞ்சியில் சேர்த்து கலக்கி மறுபடியும் சூடாக்கி மூச்சுப்பிடிப்பு இருக்கும் இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
சரும நோய்கள்
கமலா பழத்தின் தோலை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தினமும் சோப்பிற்க்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.
தேமல்
வெள்ளை பூண்டு மற்றும் வெற்றிலை சேர்த்து நன்கு மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் மறையும்.
மூலம்
துவரம் பருப்புடன் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி சேர்த்து, சாம்பார் வைத்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் விலகும்.
தீப்புண் ஆற
தேங்காய் எண்ணையுடன் வாழைத் தண்டு சாம்பலை கலந்து தடவி வந்தால் தீப்புண் காயங்கள் மற்றும் சீழ்வடிதல் விரைவில் குணமாகும்.
மூக்கடைப்பு
அரை லிட்டர் நீரில் ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
வறட்டு இருமல்
எலுமிச்சம்பழச்சாற்றுடன், தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.