திருக்குறள் பெருமை
உலகப்பொதுமறையாம் திருக்குறளை பின்பற்றி வாழ்பவர்களே வாழ்க்கையின் அர்த்தங்களை அறிந்தவர்கள்.
உலகப்பொதுமறையாம் திருக்குறளை பின்பற்றி வாழ்பவர்களே வாழ்க்கையின் அர்த்தங்களை அறிந்தவர்கள்.
திருக்குறள் கூறுவது, தான் வாழ்வில் அறத்தோடு வழவும், வாழ்க்கைக்கு அடிப்படையான பொருள் சோ்ப்பதை நோக்கமாகவும் அப்பொருளினை அறவழியில் சோ்க்க வேண்டுவதையும் வலியுறுத்துகின்றது. அற வழியில் வருவதே இன்பம் என எடுத்துைரக்கின்றது. பொது வாழ்வுக்கும், சுய வாழ்வுக்கும் அற வழியே சிறந்தது என்பதையும் உணா்த்துவது இந்நூலின் நோக்கமாகும். இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும், அழகுடன் இணைத்தும், கோர்த்தும் விளக்குகிறது.
திருக்குறள் வாழ்வியலின் அறம் சார்ந்த எல்லா அங்கங்களையும் விளக்கமாக கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பதுண்டு: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. திருக்குறளினை பல்வேறு மொழிகளில் மொழிபெயா்கப்பட்டுள்ளது. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது.
ஐரோப்பிய மக்களுக்கு லத்தீன் மொழியில் 1730 இல் திருக்குறளை அறிமுகப்படுத்தியவர் வீரமாமுனிவர் ஆவார். திருக்குறள் கருத்துக்களை (Extracts from “Ocean of Wisdom”) 1794ஆம் ஆண்டு முதன் முறையாக ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்தியவர் கின்டெர்ஸ்லே.